வாகன அனுமதிப்பத்திரத்தை பௌத்த பிக்குகளுக்கு வழங்குவது கலாசாரத்திற்கு இழுக்கு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 01, 2014

வாகன அனுமதிப்பத்திரத்தை பௌத்த பிக்குகளுக்கு வழங்குவது கலாசாரத்திற்கு இழுக்கு


வாகன அனுமதிப்பத்திரத்தை பௌத்த பிக்குகளுக்கு வழங்குவது கலாசாரத்திற்கு இழுக்கு என்று இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பிக்குகளுக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பௌத்த தேரர் ஒருவர் மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைத்த விண்ணப்பப் படிவத்தை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்துச்செய்து ரீட் கட்டளையை பிறபிக்குமாறு கோரி பௌத்த தேரர்கள் மூவர் தாக்கல் செய்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை )நிராகரித்தது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் உபாலி குணரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவ்விருவரும் இந்த மனுக்களை நிராகரித்தனர்.
வாகன அனுமதிப்பத்திரத்தை தேரர்களுக்கு வழங்குவது பௌத்த கலாசாரத்திற்கு இழுக்கு என்று இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்கு நீதிமன்றம் கடப்பட்டுள்ளது என்று அவ்விருவரும் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad