சம்மாந்துறையில் மழைவேண்டி தொழுகையும் துஆ பிரார்த்தனையும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 12, 2014

சம்மாந்துறையில் மழைவேண்டி தொழுகையும் துஆ பிரார்த்தனையும்


(tm)

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியைக் கருத்திக் கொண்டு சம்மாந்துறை ஜம்இயத்துல் உலமா சபை, நம்பிக்கையாளர் சபை மற்றும் பொதுநல அமைப்புக்கள் ஆகியன இணைந்து  ஏற்பாடு செய்த மழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும் இன்று சனிக்கிழமை காலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. 


மௌலவி வை.எம். ஜலீல் தலைமை தாங்கி நடத்தினார். தொழுகையைத் தொடர்ந்து மௌலவி ஏ.எல். ஆதம்பாவாவினால் பயான் நிகழ்த்தப்பட்டதோடு மௌலவி எம்.ஏ. ஹஜ்ஜூ முகம்மது ஹாபிஸால் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறைப் பிரதேசத்தினை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad