மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்கு நீரிணையில் கண்டுபிடித்துள்ளதாக புதிய தகவல்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்கு நீரிணையில் கண்டுபிடித்துள்ளதாக புதிய தகவல்கள்வான்பரப்பில் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்கு நீரிணையில் கண்டுபிடித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த மலேசிய விமானத்தின் பாகங்களை பாக்குநீரிணை பகுதியில் தமது நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதியில் இருந்து 5000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காணாமல்போன MH370 மலேசிய விமானத்தினை தேடி தமது நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி தனியான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்ததாக அவுஸ்திரேலியாவின் அடிலைட் பகுதியை தளமாக கொண்ட ஜியோறிசோனன்ஸ் (GeoResonance) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தேடுதலில், தற்போது தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் பகுதியில் இருந்து 5000 கிலோமீற்றர் தொலைவில் விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளதாக, அவுஸ்திரேலியாவின் ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 2,000,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் தேடுதல் நடவடிக்கைகளை தமது நிறுவனம் முன்னெடுத்ததாக ஜியோறிசோனன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்மதி புகைப்படங்கள், விமானத்தில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்கள், அணு மின்அலை உள்ளிட்ட தரவுகளின் உதவியுடன் இருபதிற்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்ததாக குறிதத நிறுவனத்தின் பேச்சாளர் டேவிட் போப் அறிவித்துள்ளார்.
அணுஉலைகள் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டறிய பன்படுத்தும் தொழில்நுட்பத்தினை தமது நிறுவனம் அதிகளவில் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
தாம் கண்டுபிடித்த சிதைவுகள் MH370 விமானத்தினுடையவை என்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளபோதிலும் அது தொடர்பாக நூற்றுக்கு நூறுவீதம் முடிவிற்கு வருவதற்கு ஆய்வுகளை தொடர வேண்டும் என ஜியோறிசோனன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் டேவிட் போப் அறிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad