இலங்கை பொலிஸ் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் -சரியான தகவல் வழங்குபவருக்கு பத்து இலட்சம் வரை சன்மானம் -மட்டக்களப்பில் சுவரொட்டி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 08, 2014

இலங்கை பொலிஸ் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் -சரியான தகவல் வழங்குபவருக்கு பத்து இலட்சம் வரை சன்மானம் -மட்டக்களப்பில் சுவரொட்டி (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அச் சுவரொட்டியில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது


1 ஒன்று கோபி

இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் எ னஅழைக்கப்படுவதுடன் வயது 31. 06.அடி உயரமுடைய பொது நிற தோற்றத்தையும் கொண்டவர்.
இவரது முகத்தில் இடதுபக்க உதட்டின் மேல் பகுதியில் வெட்டுக்காயத்துக்கு குள்ளான வடுவொன்று உள்ளது.

2 இரண்டு அப்பன்.

இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் நவரெத்தினம் நவநீதன் அல்லது அப்பன் என அழைக்கப்படுவதோடு வயது 36 .05 அடி 02 அங்குலம் உடைய பொது நிற தோற்றத்தையும் கொண்டவர்.

3 மூன்று தேவியன்.

இவர் ராதா படையணியின் விமானி ஆவதோடு அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கிய விமரனி ஒருவர் ஆவார்.இவர் தேவியன் எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ. பெயரால் அழைக்கப்படுபவர் ஆவார்.

என்றும் இவர்கள் பற்றிய ஏதேயினும் தகவல் கிடைக்குமிடத்து 0112451636 எனப்படும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ 0112321838 எனப்படும் தொலைநகல் இலக்கத்தின் அல்லது igp@police.lk எனப்படும் மின் -அஞ்சல் ஊடகவோ அறியத்தருமாறு பொது மக்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

சரியான தகவலை வழங்குபவருக்கு பத்து இலட்சம் வரைக்குமான சன்மானம் வழக்கப்படுவதோடு தகவலாளி பற்றிய இரகசியம் பேணப்படும் பொலிஸ் மா அதிபர்  என்றும் தமிழ் ääசிங்களம் ääஆங்கிலம் ஆகிய மொழிகளில்; அச் சுவரொட்டியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post Top Ad