பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி கோத்தபாய சந்திப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி கோத்தபாய சந்திப்பு


இலங்கைக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் கூட்டுக்குழுவின் தலைவர் ஜெனரல் ரசாத் மாமூத் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது இருவரும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கியமான பாதுகாப்பு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ரசாத் மாமுத் பாகிஸ்தான அரசாங்கத்தின் உயர் இராணுவ பதவியை வகித்து வருவதுடன் அந்நாட்டு பிரதமர், நாடாளுமன்றம், பாதுகாப்பு அமைச்சு, தேசிய பாதுகாப்பு பேரவை ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த சந்திப்பின் பின்னர், பாதுகாப்புச் செயலாளரும், பாகிஸ்தான் இராணுவ அதிகாரியும் தமக்கிடையில் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.


No comments:

Post Top Ad