காத்தான்குடி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

காத்தான்குடி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்


காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இளைஞனை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் போில் காத்தான்குடி பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் 2.4.2014 புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவிகள் இருவரையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்த குறித்த சந்தேக நபரான இந்த இளைஞர் புத்தி சுவாதீனமற்றவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை யன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவின் பாலமுனை பிரதேசத்திலுள்ள மாணவியொருவரை இளைஞன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
அதே போன்று இன்னுமொரு மாணவியின் கையை பிடித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரச்சன்னா மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க ஆகியோரின் ஆலோசனையுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் திருமதி கிருபை ராணி யோகராசா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடாத்தியதுடன் குறித்த இளைஞனை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
(vi)

No comments:

Post Top Ad