இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து கூற வீதிக்கு வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 08, 2014

இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து கூற வீதிக்கு வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்


(ad)

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்கள் இன்று (08) மாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். 


விசேட வரவேற்பு பிரிவில் இலங்கை வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளதுடன் அங்கு ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெறவுள்ளது. 

பின்னர் வீரர்களை ஏற்றிய பஸ் பழைய நீர்கொழும்பு tவீதி வழியாக காலி முகத்திடலை வந்தடையவுள்ளது. 

கொழும்பு - கட்டுநாயக்க பழைய வீதி ஊடாக சீதுவ, ஜா-எல, கந்தான, மஹபாகே, ஹெந்தல, வத்தளை, பேலியகொட, ஒருகொடவத்தை, பொரளை, கனத்தை சுற்றுவட்டம், பௌதாலோக மாவத்தை பம்பலபிட்டிய வழியாக இரவு 7.30 அளவில் பஸ் காலி முகத்திடலை வந்தடையவுள்ளது. 

இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து கூற வீதிக்கு வருமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

No comments:

Post Top Ad