இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து கண்டி முஸ்லிம்கள் மாவட்ட செயலாளரிடம் மஹஜர் கையளிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 01, 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து கண்டி முஸ்லிம்கள் மாவட்ட செயலாளரிடம் மஹஜர் கையளிப்பு


ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி வாழ் முஸ்லிம் மக்கள், அம்மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
கண்டி மீராமாக்கம் பள்ளி வாசலில் இருந்து பேரணியாக சென்ற முஸ்லிம்கள், கண்டி மாவட்ட செயலாளர் காமினி செனவிரட்னவிடம் இந்த மகஜரை கையளித்துள்ளனர்.

முப்பது வருடகால போர் முடிவுக்கு வந்த பின்னர், சகல இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நல்லிணக்கத்தை அழிக்கும் வகையில் இப்படியான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிய இலங்கை வாழ் முஸ்லிம்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் கண்டி ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஃபஸ்லூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தாம் வழங்கிய இந்த மகஜரை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் மாவட்ட செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post Top Ad