மூதூரின் அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 21, 2014

மூதூரின் அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுதற்போதைய அரசாங்கம் மூதூர் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்கு வரலாறு காணாத வகையில் கடந்த ஆண்டு பாரிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. 

மொத்தமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 151 வேலைத்திட்டத்தில்  இற்றைவரை 135 வேலைத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. தேசத்துக்கு மகுடம்(தெயட்ட கிருள) தேசிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம்  பிரதேசத்தில் உள்ள 36 கிராமிய பாதைகளின் அபிவிருத்திக்கு  53.6 மில்லியன் ரூபாவும்,இரண்டு நெல் களஞ்சிய நிலையத்தின் புனரமைப்புக்கென 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

36 கிராமியப்பாதைகளில் 21 பாதைகளின் வேலை பூரணமாக முடிவடைந்துள்ளன.பாடசாலைகளின் அபிவிருத்தி;க்கென 5மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் அகத்தியர் வித்தியாலயம்,பாலத்தோப்பூர் சாஹிரா வித்தியாலயம் ஆகிய கிராமியப் பாடசாலைகளில் தகவல் தொழிநுட்ப நிலையம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமிய மாணவர்கள் தகவல் தொழிநுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள இது ஏதுவாக அமையும். 

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் துறைசார்ந்த அபிவிருத்திக்கென சுமார் 2 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 36 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்காக 1 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி செலவிடப்பட்டுள்ளது.கலாசார ரீதியான  43 அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு சுமார் 6.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு அவை யாவும் நிறைவுபெற்றுள்ளன. 

பிரதேசத்தில் வாழ்கின்ற மூவினங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ள மதஸ்தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.  இது தவிர்ந்த ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளிற்கென 7மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையும் செலவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பிரதேசத்தில் கிராமிய அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad