வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்ற 80 பணியாளர்கள் உயிரிழப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்ற 80 பணியாளர்கள் உயிரிழப்பு(nf)
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்ற 80 இலங்கைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவர்களில் 60 பணியாளர்கள் ஆண்கள் என பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரத்தெனிய குறிப்பிட்டார்.
பணிப்பெண்களுடன், ஒப்பிடுகையில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமென அவர் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் 68 வீதமானவை இயற்கை மரணங்கள் எனவும், 28 வீதமானவை விபத்துக்களினால் ஏற்பட்டவை எனவும், சில மரணங்கள் தற்கொலைகள் எனவும் மங்கள ரத்தெனிய கூறினார்.
இதேவேளை, இவ்வாறான உயிரிழப்புக்களை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
ஆயினும், தனிநபர்களின் கவனக்குறைவு காரணமாக, இவ்வாறான உயிரிழப்புக்களை தவிர்க்க முடியாதுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த பணியாளர்களின் சடலங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளும் உரியமுறையில் முன்னெடுக்கப்படுவதாக மங்கள ரன்தெனிய கூறினார்.

No comments:

Post Top Ad