நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற லொறி 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 08, 2014

நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற லொறி 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து (படங்கள் இணைப்பு)


நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற லொறி ஒன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில், வட்டவளை பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் நடத்துனர் படுகாயத்துக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, சாரதிக்கு பெரும் பாதிப்பு இல்லை என வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:

Post Top Ad