அசாம், திரிபுராவில் முதல்கட்ட தேர்தல் 6 மக்களவை தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

அசாம், திரிபுராவில் முதல்கட்ட தேர்தல் 6 மக்களவை தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு !


நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று 6 தொகுதிகளில் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், திரிபுராவில் ஒரு தொகுதி என 6தொகுதிகளிலும் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்படுகிறது. நாட்டின் 16வது நாடாளுமன்றம் அமைப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, அசாம் மாநிலத்தின் தேஜ்பூர், கொலியாபோர், ஜோர்கத், திப்ரூகர் மற்றும் லட்சுமிபூர் ஆகிய 5 தொகுதிகளிலும், திரிபுராவில் உள்ள 2 தொகுதியில் திரிபுரா மேற்கு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அசாமில் காங்கிரஸ், பா.ஜ, திரிணாமுல் காங்கிரஸ், அசாம் கனபரிஷத், ஆம் ஆத்மி,சமாஜ்வாடி, ஏ.ஐ.டி.யு.எப்., எஸ்.யு.சி.ஐ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் என ஏராளமான கட்சிகள் களம் காண்பதால் பலமுனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 5 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜ வேட்பாளர்கள் உள்பட 51 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் மத்திய அமைச்சர்கள் ராணி நாரா, பவன்சிங் கட்டோவர், முன்னாள் அமைச்சர் பிஜோய் கிருஷ்ண கண்டிக்,அசாம் முதல்வர் தருண் கோகாயின் மகன் கவுரவ் கோகாய் ஆகியோர் போட்டியில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.
இங்கு கடந்த 1952ம் ஆண்டு முதல் கடந்த 2009ம் ஆண்டு தேர்தல் வரை மார்க்சிஸ்ட் கையே ஓங்கி உள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் 15 முறை வெற்றி பெற்றுள்ளது. மற்ற 9 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு 12ம் தேதியும், 6 தொகுதிகளுக்கு 24ம் தேதியும் தேர்தல் நடக்கிறதுஇந்த தேர்தலில் உல்பா தீவிரவாதிகளின் மூத்த தலைவர்களில்ஒருவரான ஹீரா சரானியா பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உல்பா தீவிரவாதிகளால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய படை மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குசாவடிகளில் 1221 வாக்கு சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குசாவடிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஜேசி ஜெயின் கூறுகையில், ‘பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், ரோந்து வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடிகளுக்கு வரத் தொடங்கினர். இந்த தேர்தலில் தான் முதன் முறையாக 11 மணிநேர வாக்குபதிவு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதே போல் திரிபுரா மேற்கு தொகுதியில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜ வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியில் உள்ளனர். திரிபுரா எல்லை பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு ஊடுருவல்களை தடுக்க தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரிபுரா மேற்கு தொகுதியில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ என முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. இந்த தொகுதியில் 10 முறை மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 1 தொகுதிக்கு 12ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி மிசோரமில் ஒரு சட்டமன்ற தொகுதி,ஒரு நாடாளுமன்ற தொகுதி, அருணாச்சல பிரதேசத்தின் 2 நாடாளுமன்ற தொகுதிகள்,மணிப்பூர் 1,மேகாலயா 2,நாகலாந்து 1 உள்பட வடகிழக்கு பகுதியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடக்கிறது.

No comments:

Post Top Ad