6-10 ம் திகதி வரை உலக இளைஞர் மாநாடு 2014 - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 04, 2014

6-10 ம் திகதி வரை உலக இளைஞர் மாநாடு 2014


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மே மாதம் 6ஆந் திகதி தொடக்கம் 10ஆந் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு – 2014ää இந்த நாட்டின் இளைஞர்கள் வாழவில் புதிய பாதைகளைத் திறந்து விடும். “கொழும்புப் பிரகடனம்” ஆவணமொன்று வெளியிடப்படவுள்ளதோடு அது இளைஞர்களினது இலக்குகளை அடையச்செய்யும் விதத்தில் அதிகாரிகளை கோரும் விதத்தில் அவர்களை வலுப்படுத்தும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா சண்டே ஒப்சேவருடனான நேர்கணலின்போது தெரிவித்தார்.


“2015 இற்குப் பின்னரான அபிவிருத்தி இலக்குகள் அல்லது நிகழ்ச்சித் திட்டங்களில்  இளைஞர்களின் பங்களிப்பு” என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெறும். 15 ஆண்டுகளுக்கென 2000ஆம் ஆண்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் வடிவமைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டிற்குப் பின்னரும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான அவசியம் உள்ளது. இந்த எண்ணக்கருவின் அடிப்படையிலேயே புதிய தொனிப்பொருள் காணப்படுகின்றது” என மன்றத்தின் தலைவர் தெரிவித்தார்.

அவர் வழங்கிய செவ்வியின் விபரம் வருமாறுää

கேள்வி : உலக இளைஞர் மாநாடு – 2014 பற்றி விபரிக்க முடியுமா?

பதில் : சுமார் 2.000 பிரதிநிதிகள் இந்த உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நானூறு இளைஞர்கள் பங்குபற்றவுள்ளனர். சிவில் அமைப்புக்கள்ää இளைஞர் அரச சார்பற்ற நிறுவனங்கள்ää இளைஞர் கழகங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் போன்றோரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சுää தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சோர்ந்த இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் இதில் பங்குபற்றவுள்ளனர். உலக இளைஞர் மாநாடு – 2014 இல் 750 அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர். இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்ட  சுமார் 100 அமைச்சர்கள் இம் மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.
மே மாதம் 6ஆந் திகதி தொடக்கம் 9ஆந் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளது. புங்குபற்றுவோருக்கு 6ஆந் திகதி குறிப்பிட்ட அறிமுக பயிற்சியொன்று இடம்பெறவுள்ளது.
மாநாட்டின் பிரதானமான நிகழ்வுகள் மே மாதம் 7ஆந் திகதி தொடக்கம் 9ஆந் திகதி வரை நடைபெறும்.   மே மாதம் 7ஆந் திகதிஇளைஞர்களின் பங்குபற்றுதல் இளைஞர் அபிவிருத்தி தொடர்பில் வடிவமைக்கப்பட்டன மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமாக கலந்துரையாடப்படும்.
மே மாதம் 8ஆந் திகதி எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளில் இளைஞர்களில் தொடர்பினை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என கலந்துரையாடப்படும். மூன்றாம் நாள் உலகளாவிய இளைஞர் இபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் எதிர்கால நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படும். இளைஞர்களை எவ்வாறு அபிவிருத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெறும்.
2000ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கௌ 2000ஆம் ஆண்டில் மிலேனியம் அபிவிருத்தி இரக்குகள் வடிவமைக்கப்பட்டன.இது அனைவரினது அபிப்பிராயங்களையும் உள்ளடக்கி இருக்கவில்லை.
நிபுணர்களின் அபிப்பிராயங்களைத் தவிர கல்வியியலாளர்கள்ää அரசியல்வாதிகள்ää இளைஞர் மற்றும் பெண்களின் அபிப்பிராயங்களையும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 2000ஆம் ஆண்டிற்கும்   2015ஆம் ஆண்டிற்கும் இடையே  பாரியதொரு இடைவெளி காணப்படுகின்றது. இவ்வாண்டுகளுக்கிடையே பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
கட்சிகளினது பங்குபற்றுதல் மற்றும் பங்களிப்பின் முக்கியத்துவத்தினயும்ää 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் அபிவிருத்தித் திட்டங்கள் வரையப்படும்போது இக் கட்சிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும் தற்போது உலகம் புரிந்துகொண்டுள்ளது.
உலக இளைஞர் மாநாடு ஒரு உலகளாவிய நிகழ்வாகும். உலகிலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந் நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.
இளைஞர் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தியில் பொதுவான இலக்குகினை அடைந்து கொள்வதற்காக இளைஞர்கள் தமது கருத்தினை பரிமாறிக் கொள்வதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பமொன்றை இந்த மாநாடு வழங்கவுள்ளது. இதற்கு முன்னதாக மெக்சிகோவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்றிய இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது உரையில் உலக இளைஞர் மாநாடு – 2014 இலங்கையில் நடைபெற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
2011ஆம் ஆண்டு இளைஞர்கள் சம்பந்தமாக நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உயர் மட்ட மாநாட்டில் இலங்கை சார்பில் முக்கிய உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் டலஸ் அழகப்பெரும உலக இளைஞர் மாநாடு – 2014 இனை இலங்கையில் நடத்துவதற்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
இது மாநாடு போன்றல்லாது ஒரு கலந்துரையாடல் போன்றே காணப்படும். இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் 2015இற்குப் பின்னரான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் கலந்துரையாடப்படும்.
2012ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களும் உலக இளைஞர் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு அங்கத்துவ நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த வருடம் இளைஞர்கள் தொடர்பான உலக மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு அங்கத்துவ நாடுகளைக் கேட்டுக் கொண்டபோது அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஜெனரல் பாக் கீ மூனை நேரடியாகச் சந்தித்து இலங்கையில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு – 2014 இல் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்தார்.இளைஞர் அபிவிருத்தி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது
இதனிடையேää உலக இளைஞர் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல்வேறுபட்ட அரசாங்கங்கள்ää அரச சார்பற்ற நிறுவனங்கள்ää இளைஞர் அமைப்புகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள்ää கூட்டங்கள் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடாத்தியுள்ளோம்.
கொழும்புப் பிரகடனம் அங்கத்துவ நாடுகளையும் ஏனைய பங்காளர்களையும் தத்தமது அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ங்களில் இளைஞர்களை உள்ளடக்குவதற்கான வழிகாட்டல்களை வழங்கும்.
ஐக்கிய நாடுகள் சபை முகவரகங்கள் இந்த முன்மொழிவினை பரவலாக அங்கீகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மூன்று தடவைகள் உலக இளைஞர் அமைப்பினை அங்கீகரித்துள்ளது.
அந்த மூன்று பிரேரணைகளிலும் மிக முக்கியமான ஒன்றாக இந்த மாநாடு காணப்படுகின்றது.
இந்த நிகழ்வுக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களை அங்கீகரித்துள்ளது.
மாநாட்டிற்கு ஒருங்கிசைவாக பூகோள கிராமத்திற்கான கண்காட்சிää கலாச்சார நிகழ்வுகள்ää கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் என பெரும் எண்ணிக்கையிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கேள்வி. இந்த மாநாட்டின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள் எவை?

பதில்: இந்த இளைஞர்கள் மாநாடு இளைஞர்கள் தமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வதற்கு பூகோள நகரமொன்றான கொழும்பு ஒரு நுழைவாயிலாக இருக்கும்.
இது எமது இளைஞர்களது ஒன்றிணைவினை உலகிற்குக் காட்டுவதற்கான ஒரு இடமாகும்.
மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் அல்லது நிகழ்ச்சித் திட்டங்களை அடைந்து கொள்வதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம். இளைஞர்கள் தொடர்பான மற்றும் அவர்களை வலுப்படுத்துவதற்குரிய பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எவ்வகையான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படத்தியுள்ளது என்பதை பல்வேறு நாடுகளிலுமிருந்து  பங்குபற்றுவோருக்கு விளக்க வேண்டும்  முன்முறையாக அதிகளவான ஆசியாää ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெக்க நாடுகள் தமது விடய ஆய்வுகளையும் அடைவுகளையும் முன்வைக்கவுள்ளன.

கேள்வி: நாட்டில் அமைதி ஏற்பட்டிருக்கின்ற அமைதி நாட்டின் இளைஞர்களிடையேயான இடைவெளியைக் குறைத்துள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. நாட்டில் இட்பெற்று வருகின்ற அபிவிருத்தி மற்றும் இளைஞர்களைவ லுவூட்டுவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும். இதனை விளக்க முடியுமா?

பதில் ; இளைஞர் விவகாரங்களை தனியாகக் கையாள்கின்ற உலகின் சொற்பமான நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளதோடு இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி என மீள பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வேலையின்மை வீதம் குறைவானதாகும்.
நடைமுறை உலகில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அத்தகையை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பிலும் இளைஞர்களும் அவர்களது பிரதிநிதிகளும் கலந்துரையாடுவதற்கான ஒரு பொது மேடையாக உலக இளைஞர் மாநாடு – 2014 இருக்கும். இலங்கைக்கு விஜயம் செய்யும் இளைஞர்கள் எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களில் அமைச்சர்களாகää பாராளுமன்ற உறுப்பினர்களாகää வர்த்தகத் தலைவர்களாகää சமூகசேவை செயற்பாட்டாளர்களாக மாறக் கூடும். இந்த நாட்டில் இடம்பெற்று வருகின்ற பாரிய அபிவிருத்தியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமொன்று அவர்களுக்கு கிடைக்கின்றது.

கேள்வி: உலக இளைஞர் மாநாடு – 2014 தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்தியை வெளிக்காட்டுவதற்கான ஒன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?  

பதில்: ஆம் நிச்சயமாகää உலக இளைஞர் மாநாடு – 2014 இல் பங்குபற்றும் இளைஞர்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்ற பல்வேறுபட்ட உட்கட்டமைப்புகள் பற்றியும் வாழ்வாதாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அந்தந்த இடங்களுக்கு விஜயம் செய்வதன் மூலம் அவர்கள் அறிந்து கொள்ள முடியும். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஊடகங்களும் இம் மாநாட்டில் பங்குபற்றுகின்றன. அவர்கள் தத்தமது தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாக இவ்வாறான அபிவிருத்திகள் தொடர்பில் ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்புச் செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

கேள்வி: இலங்கையிலிருந்து எத்தனை இளைஞர்கள் பங்குபற்றவுள்ளனர்?

பதில்: இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றவுள்ளனர். அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளைஞர்களைப் பிரதிநித்துவப் படுத்தவுள்ளனர். அவர்கள் மிகக் காத்திரமான பணியை ஆற்றுவார்கள் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்

கேள்வி. இந்த மாநாட்டின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் சமூக மற்றும் கலாச்சார நன்மைகளை குறிப்பிட முடியமா?

பதில்: உலக நாடுகளுக்கிடையே பரஸ்பர உறவுகள் விருத்தியடைந்து உலக மாநாடுகள் அமைதியானதாகவும் இணக்கப்பாடானதுமாக இடம்பெறுவதை வரலாறு காட்டுகின்றது.
மாநாட்டில் பங்குபற்றும் இளைஞர்கள் ஏனையோருடன் தத்தமது கலாச்சார விழுமியங்களை பரிமாறிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். இது தவிரää வௌ;வேறு இன மற்றும் சமூகக் குழுக்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் பங்குபற்றுவதன் காரணமாக வெ;வேறு கலாச்சாரப் பாரம்பரியங்களை எமது இளைஞர்கள் கற்றுக்கொளள முடியும்.

கேள்வி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இவ்வருடம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் எவை ?

பதில்: நாம் இவ்வருடம் இளைஞர்களுக்கான புரட்சிகரமான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் படுத்தவுள்ளோம். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய இளைஞர் கொள்கையினை ஆரம்பிக்கவுள்ளது. எமது அமைச்சர் இதில் முன்னோடியாகக் காணப்படுகின்றார். நாம் முன்னோடியான திட்டங்களையே எதிர்பார்க்கின்றோம்
நாம் இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களின் எண்ணிக்கையினை இரண்டு மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இவ்வருடம் நடாத்தப்படும்.
மொழிபெயர்ப்பு : எம்.ஐ.ஏ.நஸார்ää

No comments:

Post Top Ad