பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 4 நான்காவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் 4 நான்காவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)  பிந்திய செய்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரில் 7 ஏழு கிளைகளுடன் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி        அல் குர் ஆன் பாடசாலையின் 4 நான்காவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27-04-2014  ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.


பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக எங்கள் தேசம் பத்திரிகை மற்றும் பிறபோதய சஞ்சிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் எம்.எச்.எம்.ஹஸன் கலந்து கொண்டார்

இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால்  பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை 100 மாணவ மாணவிகள் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமிää கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக உதவிச் செயலாளர் ஏ.ரி.எம்.ராபி ääவிடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ்ääமுன்னாள் காழி நீதிபதி எம்.எம்.எம்.மஃறூப் கரீம்ääகாத்தான்குடி தள வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்ää காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)ääஏ.ஜி.எம். பிரதர்ஸ் உரிமையாளர் ஏ.ஜே.எம்.ஹாரூன்ääகாத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஆசிரியர் பிர்தௌஸ் ääபொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம்ää மற்றும் உலமாக்கள்ääஊர் பிரமுகர்கள் ääபெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை மாணவ மாணவிகளில் ஆற்றல்களை வெளிக்கொணரும் தேசிய கீதம்ääஹதீஸ் போட்டிääஉரையாடல்ääகஸீதாääஅல் குர் ஆன் முரத்தல்ääதஜ்வீத் மாநாடுääமஃதூராத் நாடகம்  போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad