சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 35,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 14, 2014

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 35,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில்(nf)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 35,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண கூறுகின்றார்.
பொலிஸ் ரோந்து சேவைகள்,  நடமாடும் சேவை உள்ளிட்ட நகர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சிவில் உடையிலும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
மதுபோதையில் பயணிப்பதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண கூறுகின்றார்.
பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் பட்சத்தில், அவர்களை விளக்கமறியலில் வைக்கவும், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
மதுபோதையிலும், வேகமாகவும் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post Top Ad