27 இலட்சம் பெறுமதியான 5000 ரூபா கள்ளநோட்டுக்களுடன் இராணுவ வீரர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 02, 2014

27 இலட்சம் பெறுமதியான 5000 ரூபா கள்ளநோட்டுக்களுடன் இராணுவ வீரர் கைது


(tk)
27 இலட்சம் பெறுமதியான 5000 ரூபா கள்ளநோட்டுக்களுடன் கேகாலை பல்லேகம பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பல்லேகம அகஸ்உயத்த தீவல பகுதியில் வசிக்கும் திலீப்ப குமார கருணாரத்ன (வயது 30) என்ற வீரரே கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்.

பரகல இராணுவ முகாமில் கடமையாற்றும் இவரது கேகாலை வீட்டை சோதனையிட்டபோது 520 ஐயாயிரம் ரூபா நோட்டுக்களும், 10 ஆயிரம் ரூபா நோட்டுக்களும், பிரிண்டர் ஒன்றும், மடிகணனி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். ஐயாயிரம் ரூபா நோட்டுக்களில் ஞி/21 392082 என்ற இலக்கமும், ஆயிரம் ரூபா போலி நோட்டுக்களில் ஷி/37 686138 என்ற தொடர் இலக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தொடர் இலக்கங்கள் கொண்ட 5000 ரூபா, 1000 ரூபா நோட்டுக்கள் கிடைத்தாலோ அல்லது எவராவது வைத்திருந்தாலோ அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தரும்படி பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கேகாலை பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரியலால் தஸநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதுடன், போலி நாணயத்தாள் அச்சிட்டமை தொடர்பாக இராணுவ வீரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post Top Ad