தெற்கு அதிவேக வீதியில் 24 மணி நேரத்தில் 58 இலட்சம் வருமானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

தெற்கு அதிவேக வீதியில் 24 மணி நேரத்தில் 58 இலட்சம் வருமானம்(ad)

தெற்கு அதிவேக வீதியில் நாளொன்றில் பயணித்த அதிகமான வாகனங்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளன. 

நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் 24,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 


இதன்மூலம் 58 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

சிங்கள, தமிழ் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அதிவேக வீதியில் கட்டணங்கள் குறைக்கப்பட்டமையே, வாகன போக்குவரத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. 

ஜனாதிபதி அறிவுரைக்கமைய கடந்த 10ம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை அதிவேக வீதியில் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post Top Ad