காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 02, 2014

காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நீதி அமைச்சின் கீழ் இயங்கும் காத்தான்குடி புதிய மத்தியஸ்தர்கள் சபையின் 2014 ஆண்டுக்கான காலாண்டு ஒன்று கூடல் நிகழ்வு கடந்த வாரம் 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஆ.ம ஹாஜியார் வளாகத்தில் மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையில் இடம்பெற்றது.


காத்தான்குடி பிரதேசத்தில் சமயääசமூக ரீதியான பிணக்குகளை சுமுகமான இணக்கப்பாட்டுடன் மத்தியஸ்தர் குழாமினால் தீர்வு காணப்பட்டு வருவதால் காத்தான்குடி பிரதேசத்தில் இச் சபை மக்களின் நல் அபிமானத்தைப் பெற்று கடந்த பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

சுமார் நாற்பது ஆண்ääபெண் உறுப்பினர்கள் இச்சபையில் செயற்படுகின்றனர்.

மூத்த தலைவர்கள் ääஉலமாக்கள்ää அதிபர்ää ஆசிரியர்கள்ääசமூகப் பணியாளர்கள் என பலதரப்பினர்களுடன் பத்துக்கு மேற்பட்ட பெண்களும் கடமையாற்றுகின்றனர்.

இவ் ஒன்று கூடலில் உறுப்பினர்களின் சுவாரஷ்யமான அனுபவங்கள்ääகடந்த கால சம்பவங்கள்ääபிணக்குகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக காத்தான்குடி மத்தியஸ்தர் சபையின் உறுப்பினரும்ääகாத்தான்குடி மீடியா போரத்தின் தலைவருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி மத்தியஸ்தர் சபையின் உப தவிசாளர் அஷ்ஷேய்க் அல்ஹாபிழ் மௌலவி றமீஸ் ஜமாலி ääகாத்தான்குடி மத்தியஸ்தர் சபையின் மூத்த உறுப்பினர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad