இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கை அணிக்கு 20 கோடி ரூபா பரிசு ! இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கை அணிக்கு 20 கோடி ரூபா பரிசு ! இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு


(nf)
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு இருபது கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுமாக இருந்தால், இலங்கை அணியினருக்கு 15 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க ஸ்ரீ லங்கா கிரிகெட் தீர்மானித்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிகெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 500,000 டொலர் போட்டி பங்களிப்புக் கட்டணமாக வழங்கப்படுவதுடன், வெற்றிபெறுமிடத்து ஊக்கத்தொகையாக 10 இலட்சம் டொலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad