மட்டக்களப்பு படுவான்கரை மக்களுக்கு நீண்டகாலம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மண்முணைப்பாலம் பூர்த்தி- ஜனாதிபதி 19ஆம் திகதி மாலை திறந்து வைப்பார் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 15, 2014

மட்டக்களப்பு படுவான்கரை மக்களுக்கு நீண்டகாலம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மண்முணைப்பாலம் பூர்த்தி- ஜனாதிபதி 19ஆம் திகதி மாலை திறந்து வைப்பார் (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நீண்ட காலமாக சுமார் 2 இலட்சம் படுவான்கரை பிரதேச மக்களின் போக்குவரத்திற்கு மிக இடைஞ்சலாக இருந்து வந்த மண்முனைத்துறை புதிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் முற்றாக நிறைவு பெற்றுள்ளன.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 4 மணியளவில் இப்பாலத்தை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

இப்பாலத்தின் நிர்மாணப்பணிகள் மகிந்த சிந்தனை திட்டத்திற்கமைய போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு சீரான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் சுமார் 1870 மில்லியன் ரூபா ஜப்பான் நாட்டு அரசாங்க உதவி திட்டத்தில் இப்பாலம் பூர்த்தி செய்யப்படுள்ளது.

இப்பாலம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் கொக்கட்டிச்சோலை கேந்திரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய பாலத்தின் ஊடாக கொக்கடிச்சோலைää மகிலடித்தீவுää மாவடிமுன்மாரிää அரசடித்தீவுää முதலைக்குடாää தாந்தாமலைää முனைக்காடுää தும்பங்கேணி உட்பட சுமார் 2 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் மிகுந்த பயனைப்பெறவுள்ளனர்.

இதன் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான நெல்வயல்களின் நெற்செய்கையாளர்கள் உப உணவு உற்பத்தியாளர்கள் கால்நடை வளர்ப்போர்ää நன்னீர் மீன்பிடியாளர்கள் அரச பணியாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் வைத்தியசாலை நோயாளிகள் நீணட காலமாக அனுபவித்த துயரத்திற்கு தீர்வு கிடைப்பதுடன் படுவான்கரை மக்களும் அனைத்து அபிவிருத்திக்கும் ஏனைய உரிமைகளுக்கும் சமமான உரித்துடையவர்கள் என்பதை நிருபிக்கும் பெரும் வாய்ப்பாக இப்பால நிர்மாணத்தைக் கொள்ளலாம்.

இப்புதிய பாலத்தின் பூர்த்திப்பணிகளை கண்டறிவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று மாலை அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலமைகளை கண்டறிந்ததுடன் மேலும் இப்பிரதேசத்தில் பாலம் திறக்கப்படும் வரை உள்ளகாலத்தில் நீர்வழி இயந்திர பாதை ஊடாக பயணிப்பதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டதுடன் மக்களின் வேண்டுகோளின் பெயரில் தடங்கள் இன்றி மண்முனைப்பாலத்தை கடக்க தடைப்பட்டுள்ள ஒரு நீர் வழி பாதை இயந்திரத்தை உடனடியாக திருத்தம் செய்து மக்கள் பாவணைக்கு பயன்படுத்த ஆவண செய்யுமாறு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளை பணித்தார்.

இந்த விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மகிந்த சிந்தனைக்கமைய யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அபிவிருத்திகளை கடந்த காலத்தில் பயங்கரவதிகளின் அச்சுறுத்தல்களால் இழந்த படுவான்கரை பிரதேச மக்களுக்கு இழந்த அபிவிருத்தி பணிகள் மீளக்கிடைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மிகுந்த விருப்பத்தின் பேரில் இப்புதிய பாலம் பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த அளப்பெரிய சேவையை பெற்றுத்தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு எமது மக்கள் நன்றிக்கடனுள்ளவர்கள் என்பது நம்பிக்கை இந்த பிரதான பாலத்தை அமைக்க முன்னாள் அரச தலைவர்களான ஜே.ஆர்.ஜெயவர்தனää ஆர்.பிரேமதாஸ மற்றும் தேர்தல் காலங்களில் தமிழ் கூட்டமைப்பு பிரதி நிதிகள் பலதடவை பொய்வாக்குருதி வழங்கி இம்மக்களை ஏமாற்றி வந்துள்ள போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே இதன் பணி நிறைவு பெற்றுள்ளது. எனக் குறிப்பிட்டார் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்


No comments:

Post Top Ad