தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கா-குடி 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு கா-குடி 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி-05 164 ஏ கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று 06-04-2014) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.


பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் க. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி. நபீல்ää 164 ஏ கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.யூ.ஏ புவாத்ää சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அமீனுல்லாஹ் மற்றும் 164ஏ பிரிவு மகளிர் சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது வீடு வீடாக சென்ற அக் குழுவினர் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை பார்வையிட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் அவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.No comments:

Post Top Ad