காத்தான்குடி-ஹூஸைனிய்யா குர் ஆன் மத்ரசாவின் 10 வது வருடாந்த பரிசளிப்பு விழா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 06, 2014

காத்தான்குடி-ஹூஸைனிய்யா குர் ஆன் மத்ரசாவின் 10 வது வருடாந்த பரிசளிப்பு விழா


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடி -1 முதலாம் குறிச்சி ஹ_ஸைனிய்யா பள்ளிவாயலில் இயங்கும் அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யா குர் ஆன்  மத்ரசாவின் 10 வது வருடாந்த  பரிசளிப்பு விழாவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மக்தப் குர் ஆன் மத்ரஸா ஆரம்ப நிகழ்வும் 05-04-2014 நேற்று சனிக்கிழமை மாலை  ஹ_ஸைனிய்யா பள்ளிவாயல் மண்டபத்தில் அப் பள்ளிவாயல்; தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.


இங்கு நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இதன் போது குர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த 10 மாணவ மாணவிகளுக்கு பிரதம அதிதி  மற்றும் கௌரவ அதிதிகளினால் விருதும் ääசான்றிதழும்ääபரிசில்கழும் வழங்கிவைக்கப்பட்டது .மட்டுமன்றி அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யா மத்ரசா முஅல்லிமும் ääபள்ளிவாயல் பேஷ் இமாமுமான மௌலவி எம்.எம்.மபாஸ் ஹாபிழ் மற்றும் உதவி முஅல்லிம் ஆகியோருக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

இதில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை சார்பில் வருகைதந்த மௌலவி எம்.பாஹிம் ஹ_மைதியினால் மக்தப் குர் ஆன் மத்ரஸா தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு மக்தப் புதிய குர் ஆன் மத்ரஸாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) ää காத்தான்குடி குர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையின் செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர்ääகுர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபை பரீட்சைக்குழு உறுப்பினர் மௌலவி எச்.எம்.சாஜஹான் (பலாஹி)ääஹ_ஸைனிய்யா பள்ளிவாயல் உப தலைவர் எம்.ஐ. ரஹீம் ஹாஜியார் உட்பட உலமாக்கள் ääஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


No comments:

Post Top Ad