நாட்டின் அடுத்த ஜனாதிபதியை முஸ்லிம் காங்கிரஸே தீர்மானிக்கும் ! ரவூப் ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 11, 2014

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை முஸ்லிம் காங்கிரஸே தீர்மானிக்கும் ! ரவூப் ஹக்கீம்


இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக யார் வர வேண்டும். அடுத்த அரசாங்கத்தை யார் அமைப்பது, என்பதை தமது கட்சியே தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வத்தளையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரேமதாஸ, சந்திரிகா போன்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தனர்.
இதனால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானித்தும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே.
ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறுவதை கண்டிக்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி கவிழும். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறாது என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad