பாடசாலையிலிருந்து புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மீட்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 31, 2014

பாடசாலையிலிருந்து புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மீட்பு
(tm)

காலி,உலுச்டிகே ரிச்சட் பத்திரண வித்தியாலத்திலிருந்து புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காலையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்களே இந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்து அதிபரிடம் கையளித்துள்ளனர். 


மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி) மணிசின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாடசாலை வாக்களிப்பு மத்தியநிலையமாக இருந்துள்ளது. வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் உதவி தேர்தல்கள் ஆணையாளர் பீமல் இந்துசிரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பாடசாலைக்கு வருகைதந்த அவர் வாக்குச்சீட்டுகளை முத்திரையிட்டு எடுத்துச்சென்றுள்ளார்.

No comments:

Post Top Ad