முஸ்லிம் காங்கிரஸூக்கு அரசாங்கத்தில் இருக்க விருப்பமா இல்லையா ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

முஸ்லிம் காங்கிரஸூக்கு அரசாங்கத்தில் இருக்க விருப்பமா இல்லையா ?

(tw)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருக்க விரும்புகிறதா, இல்லையா என்பதை முடிவு செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த கட்சின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை கையளித்திருந்தது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கையை மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்தமை குறித்து அமைச்சரவையில் உள்ள ஏனைய சிங்கள கடும் போக்கு அமைச்சர்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி தலைமையில் நேற்று தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி விடயம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ, ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சரான சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன போன்ற கடும் போக்கு சிங்கள தேசியவாத அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கை தொடர்பில் கடுமயான விமர்சின்ஙகளை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களான கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனக் கூறி, முஸ்லிம் காங்கிரஸ் 50 பக்க அறிக்கை ஒன்றை மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்திருந்தது.
அத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வழிப்பாட்டு தளங்களில் அமைந்துள்ள இடங்கள் தொடர்பான வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களையும் முஸ்லிம் காங்கிரஸ், இந்த ஆவணத்தில் உள்ளடக்கி இருந்தாக கூறப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த அறிக்கையை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகளில் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் கடும் அதிருப்தியும் ஆத்திரமடைந்துள்ள ஜனாதிபதி, அறிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு உத்தரவிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், ஆளும் கூட்டணியில் உள்ள சில உறுப்பினர்களை ஜனாதிபதியினால் கட்டுப்படுத்த முடியாதது போலவே போன்றே, தன்னாலும் தமது கட்சியின் உறுப்பினர்கள் சிலரை கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக கூறியுள்ளார்.
தமது கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன் அலியே ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் குறித்த அறிக்கையை கையளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad