வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கண்டியில் “ஆகாய மார்க்க சுற்றுலா ” - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, March 26, 2014

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கண்டியில் “ஆகாய மார்க்க சுற்றுலா ”


அதிவேக வீதி அபிவிருத்திகள் இல்லாத காரணத்தால் உள்ளூர் சுற்றுலா மையங்களுக்குச் செல்வதற்கு 'ஆகாய மார்க்க சுற்றுலா" முறையொன்று வெளிநாட்டுச் சுற்றுலாத் துறையினருக்கு இன்று கண்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று கண்டி போகம்பரை மைதானத்திருலிருந்து இது ஆரம்பமானது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்றைய முதல்நாள் நிகழ்வில் 130 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாத்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரு ஹெலிகொப்டரில் 25 பேர் வீதம் செல்லக் கூடியதாக அமைந்துள்ளது. இது தொடர்பாக டெஸ்டினேசன் முகாமைத்துவக் கம்பனியின் தலைவர் சந்திரா விக்கிரமசிங்க பின்வருமாறு தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக எமது சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவைக் காட்டியது. யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் ஒரு நாளைக்கு 100 டொலர்களிலும் அதிகமாகச் செலவிடும் சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது.
ஆனால் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பாரியளவு சுற்றுலாத்துறையினர் வருகை தந்த போதும் அவர்கள் நாளாந்தம் 30 அல்லது 35 டொலர்கள் செலவிடுவோராகவே இருந்தனர்.
இது அன்றாட செலவினத்தை தக்கவைக்கும் துறையாக மட்டுமே இருந்தது. பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவோ வருமானத்தை அதிகரிக்கவோ முடியாதிருந்தது. தற்போது வசதிபடைத்த சுற்றுலாத்துறையினர் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
எனவே அவர்களுக்கேற்ற வகையில் எமது சேவைகளை விரிவு படுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக AIR TOURISM என்ற ஆகாய மார்க்க சுற்றுலாவை ஆரம்பித்துள்ளோம்.
இவர்கள் ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 500 டொலர்கள் வரை செலவிடுவதன் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதுடன் பாரிய வருமானத்தையும் ஈட்டமுடியும்.
இதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான சுற்றுலா சபை தேவையான வழிகாட்டல்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
No comments:

Post Top Ad