எகிப்தில் அல் அஸ்ஹர் இலங்கை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

எகிப்தில் அல் அஸ்ஹர் இலங்கை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு


அல் அஸ்ஹர் இலங்கை மாணவர்களால் 2012 இ2013 ஆண்டுகள் பட்டதாரியாக வெளியாகிய BA மற்றும் MA மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வுடன் சேர்த்து எகிப்துக்கான இலங்கை தூதரகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி “துமிந்த சிறிவர்த்தன” என்பவருக்கான பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.


இவர் பல வருடம் இலங்கை தூதரகத்தின் மூலம் சகல இலங்கை பிரஜைகளுக்கும் மனம் சுளிக்காது கடமையாற்றி இருந்தார் .அதை நன்றி பாராட்டும் உணர்வுடனே இந்த பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்த நிகழ்வில் எகிப்துக்கான தூதரகத்தின் வர்த்தக தொடர்பு முதல் செயலாளரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை மிக சிறப்பாக நடத்த துணை செய்தார் .மற்றும் பல இலங்கை மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக்கினர் .

இதில் பட்டம் பெற்று வெளியாகிய மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டதோடு துமிந்த சிறிவர்த்தன அவர்களுக்கும் அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது .

MA பட்டம் பெற்றவர்கள் :
1- L.M. முபீத் (நத்வி) மூதூர்
2- A.H அப்துல்லா (நத்வி) புல்மோட்டை
2- A. அஜ்வத்  வரகாபொல

BAபட்டம் பெற்றவர்கள் :
1- P.T. கஸீர் (ஜவாதி ) கிண்ணியா
2- L- சிபான் (பலாஹி ) காத்தான்குடி
3- ஹாமீம் (சர்கி ) ஏறாவூர்

இந்த நிகழ்வின் போது முஹம்மத் ரியால் தய்யிப் என்பவரால் பிரியாவிடை பெற்று செல்லும் துமிந்த சிறிவர்த்தன அவர்களுக்கு பெறுமதியான அன்பளிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது . இதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தது கவனத்தில் கொள்ள தக்கது  .


No comments:

Post Top Ad