கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஹாரிஸ் ஜேபி நியமனம். (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 03, 2014

கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஹாரிஸ் ஜேபி நியமனம். (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவருக்கான நியமனடிக்கடிதம் நீர்கொழும்பு லகூன் வீவ் ஹோட்டலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின்  பணிப்பாளர் பேராசியர் ஜெயந்த களுபோவிலவினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 26 உறுப்பினர்களும் இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் காரியாலயமாக காத்தான்குடி டெலிகோம் வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையிலுள்ள காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் காரியாலயம் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad