இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 25, 2014

இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை


இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகள் பயிற்சியின்போது தாக்குதல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களை துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியானது அநுராதபுரம் இராணுவ முகாமிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு அநுராதபுரம் முகாமில் பயிற்சிகள் வழங்கப்படவில்லை.

ஆகையால், துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண் பயிலுநர்கள் தமிழ் யுவதிகளே என்று கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

No comments:

Post Top Ad