முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் ! ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 16, 2014

முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் ! ஹக்கீம்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள முன்னா இணக்கம் காணப்பட்டிருந்தது.

அரசாங்கம் இணக்கப்பாடுகளை மதிக்காவிட்டால் எதிர்வரம் ஆகஸ்ட் மாதமளவில் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி வரும் ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டால்ää மாகாணசபையை கலைக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வதென ஆளும் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணங்கியிருந்தன.
இதன்படி முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரும் பின்னா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டரை ஆண்டு காலம் பூர்த்தியாகின்றது.
இதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்.
ஏதேனும் காரணங்களுக்காக முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ்பெற்றுக்கொள்ள நேரிடும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

No comments:

Post Top Ad