ஹக்கீமுக்கு எதிராக பொதுபல சேனா மீண்டும் குற்றச்சாட்டு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 23, 2014

ஹக்கீமுக்கு எதிராக பொதுபல சேனா மீண்டும் குற்றச்சாட்டு


நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் நாட்டை பிளவுப் படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுபல சேனா மீண்டும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.


அமைச்சர் ரவுப் ஹக்கீம் நாட்டை பிரிப்பதற்கான இரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுபல சேனா அண்மைக்காலமாக அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

எனினும் இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு பொதுபல சேனாவே காரணம் என்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad