எனது அரசோடு விளையாட வேண்டாம் ! ஹக்கீமுக்கு மஹிந்த - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, March 05, 2014

எனது அரசோடு விளையாட வேண்டாம் ! ஹக்கீமுக்கு மஹிந்த


மாறி மாறி மறுப்புகளைத் தெரிவித்து வந்த போதும் என்றாவது உண்மைகள் வெளிவந்தே ஆக வேண்டும் எனும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் மு.கா தலைவர் ரவுப் ஹகீமுக்குமிடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதனை உறுதி செய்வதற்காக முயன்றபோது மு.கா உயர்பீடம் அதற்கான விளக்கம் தர மறுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வார இறுதியில் அமைச்சர் ரவுப் ஹகீமிடம், அரசில் இருந்து கொண்டு, பதவி சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு முதுகில் குத்தும் வேலை செய்வதை விட வெளியேறியிருக்கலாம் என தெரிவித்த அதே வேளை நான் உங்களை சந்திக்க எவ்வளவோ முயன்றபோதும் முடியாத காரணத்தினாலேயே இவ்வாறான அறிக்கை சமர்ப்பிக்கும் தேவை வந்தது எனவும், உங்களைப் போல நானும் ஒரு கட்சித் தலைவன் எனக்கும் எனது கட்சியில் இருக்கும் நெருக்கடியை சமாளிக்க வழி தேவையென நீதியமைச்சர் பதிலளித்ததாகவும் இதனால் மேலும் ஆத்திரம் கொண்ட ஜனாதிபதி நீங்கள் இதற்கு முன்னிருந்த கூட்டணிகளில் விளையாடியது போல் எனது அரசில் விளையாட வேண்டாம், அது இங்கு நடக்கப்போவதில்லை எனவே உங்கள் கூட்டத்துடன் வெளியேறுவது என்றால் வெளியேறலாம் என தெரிவித்ததாக பிரபல ஆங்கில மொழி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதனடிப்படையில் நீதியமைச்சர் தானாக விரும்பி எதையும் செய்யவில்லையென்பதும் தெளிவாகியுள்ளதாக மூத்த ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post Top Ad