சவூதியில் கலவரம் ஒருவர் பலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 04, 2014

சவூதியில் கலவரம் ஒருவர் பலி


சவூதி அரேபியாவில் இருந்து வெளியேற்றப்பட காத்திருக்கும் வெளிநாட்டுத்தொழிலாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் நடந்த கலவரத்தில் ஒருவர் பலியானதாக சவூதி போலீஸார் தெரிவித்தனர்.இக்கலவரத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.


புனித மக்காவுக்கு அருகே இருக்கும் அல்-ஷுமைசி என்ற இடத்தில் இருக்கும் இந்த மையத்தில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.அதனை கட்டுப்படுத்த தாங்கள் தலையிட நேர்ந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சவூதி அரேபியாவில் ஆவணங்கள் இல்லாத நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ளக் கொடுத்திருந்த காலக்கெடு நவம்பர் மாதம், முடிந்தபோது, அவர்களை சவூதி அரேபிய அரசு நாட்டிலிருந்து வெளியேற்றியிருந்தது.

இந்த மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் சிலர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கடந்த மாதம் விமர்சனங்களைத் தெரிவித்திருந்தது.

No comments:

Post Top Ad