சவுதிக்கு நன்றிகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 31, 2014

சவுதிக்கு நன்றிகள்


ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், பெருபான்மை சிங்களவர்கள் மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் சவூதி அரேபியா முக்கிய ஆதரவு வழங்கிமை தொடர்பிலும் இலங்கை அந்நாட்டை பாராட்டியுள்ளதாக அரபு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கைக்கு எதிராக வாக்கெடுப்பில் சவூதி முக்கிய ஆதரவை வழங்கியதாக சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம்.பௌசி கூறியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்ததுடன் 12 நாடுகள் எதிராக வாக்களித்தன.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கைக்கு சார்பாக வாக்களித்ததுடன் இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், 23 நாடுகள் ஆதரவு வழங்கியதுடன் அதற்கு ஒப்புதல் அளித்தன.
37 வருடங்கள் நடைபெற்ற பிரிவினைவாத போரில் 7 வருட காலத்தில் இலங்கை அரச படைகளும், பிரிவினைவாத போராளிகளும் மேற்கொண்ட குற்றச் செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் அரச படையினரால் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்து வருகிறது.
பெருபான்மை சிங்களவர்கள் மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு இடையில் நீடித்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேலும் கால அவகாசம் தேவை என்றும் இலங்கை கூறியுள்ளது.
இந்த நிலையில், சவூதி அரேபிய ராஜ்ஜியம் சகல சர்வதேச அரங்குகளிலும் இலங்கைக்கு ஆதரவளித்து வந்துள்ளதாக அமைச்சர் பௌசி கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு நாடுகளும் பயங்கரவாத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டது. இதனால் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் நல்லிணக்க முயற்சிகளுக்கான முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கடிதத்தை சவூதியின் ஆட்சியாளரிடம் கையளித்த இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் விரைவில் சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார் எனவும் அமைச்சர் பௌசி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad