முகநூல் பாவனையும் எமது சமூகமும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 06, 2014

முகநூல் பாவனையும் எமது சமூகமும்(அபு அரிய்யா)

இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது. அதில் தொடர்பு சாதனங்களின் தாக்கம் அபாரமானதாகும். குறிப்பாக ஓரளவு கற்ற குறைந்தது 10 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோருடன் முகநூல்(பேஸ்புக்) தொடர்பு பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் நடப்புக்களை ஒரே நொடிக்குள் உடனுக்குடன் அறியத்தரும் சாதனங்களான கைத்தொலைபேசிää இன்ரநெட்ää சமூக வலைத்தளங்களான பேஸ்புக்(முகநூல்)ää யூடியுப்ää டுவிட்டர்ää ஸ்கைப் இது போன்ற இன்னும் பல சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள்  வளர்ந்து கொண்டு செல்கின்றன.

அந்த வகையில் உலகின் அதிக மக்களாலும் (உலகில் 120கோடிக்கு அதிகமானவர்களும்ää இலங்கையில் 13 இலட்சத்துக்கு அதிகமானவர்களும் பேஸ்புக் பாவனையாளர்கள்) குறிப்பாக எமது இளைய சமூகத்தினராலும் அதிகம் பயன்டுத்தப்படும் ஒரு சமூக வளைத்தளம்தான் பேஸ்புக்(முகநூல்) பாவனையாகும்.  இன்று கணனியின் பாவனை தொடர்பாக ஓரளவு அறிவு படைத்த அனைத்து சாராரும் இந்த பேஸ் புக்கின் பக்கத்தில் தலைசாய்க்காமல் இருப்பதில்லை. எமது சமூகத்திலும்; கூட இளைஞர்ää யுவதிகள் என பெரும்பாலானோரின் பயன்பாட்டுக்குரிய சமூக வலைத்தளமாக இந்த முகநூல் பாவனையானது மாறிப்போயுள்ளது.

மனிதன் தான் வாழும் காலத்தின் தேவைக்கேற்ப மனித நாகரீகத்தின் பொதுவான முன்னேற்றத்தோடு இணைந்து செல்லும் போதுதான் அவனும் சமூக மாற்றத்தின் பயன்பாட்டை இலகுவாக அடைந்து கொள்ள முடியும். என்பதற்கமைய இவ்வாறான  வளைத்தளங்களின் பயன்பாட்டாளர்களாக நம்மவர்கள்  இருப்பதில் ஒன்றும் தவறில்லை.

ஆனாலும் இது பயன்பாட்டாளர்களின் தேடலுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப  சமூக நன்மைக்கும்ää தீமைக்கும் வாய்ப்பளிக்கும். ஒன்றில் சாக்கடைகள் நிறைந்த காமவெறியர்களின் புகலிடமாக அமையும் அல்லது ஆன்மாவுக்கும்ää அறிவியலுக்கும் நன்மை பயக்கும் சிறந்த சக்தியாக மிளிரும்.

இம்முகநூல் பாவனையைக் கொண்டு நன்மை செய்ய நாடும் நல்லுள்ளங்கள் அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றமையையும் அறிவுத்தேடலுள்ள மாணவர்கள் அவற்றால் அதிக பிரயோசனம் அடைந்து வருகின்றமையையும் மறுக்க முடியாது.

ஒப்பீட்டளவில் இன்றைய எமது இளைய சமூகத்தினரது (இலங்கையில் 18 - 24 வயதுக்கிடைப்பட்ட 696571பேர் பேஸ்புக் பாவனையாளர்கள்)  முகநூல் பாவனையானது அதிகபட்சம் தீயவற்றின் தேடலாக அமைந்திருப்பதை அவர்களது உபயோகத்தினது தன்மையைக்கொண்டும்ää அவர்கள் பெற்றுள்ள நண்பர்கள் குழுமத்திலிருந்தும்ää தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் விளைவுகள்  மோசமான காம உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு இளைய சமூகம் தோற்றம் பெறும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இது சிறந்த பண்பாடுடைய எமது சமூகத்தைப் பொறுத்த வரைக்கும் அபாயகரமான சமிக்ஞையாகும்.

எமது நாட்டில் அண்மைக் காலங்களில் இப்பாவனையின் அபாயங்களை அறிந்திராத மாணவர்கள்  தொடர்பாக இடம்பெற்ற சம்பவத்தை உதாரணமாகக் கூற முடியும். குருநாகல் பிரதேச பாடசாலையொன்றின் 16 வயதுடைய மாணவியும்ää ஒரு இளைஞனும் இணைந்த புகைப்படம் முகநூலில் பிரசுரமான சம்பவம் தொடர்பாக அம்மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்;ச்சிச் சம்பவத்தால் நாடே துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தமை எமக்கான சிறு சான்றாகும். அது போல் பிரபலமான வர்த்தகர் ஒருவருடைய வீட்டில் நடைபெற்ற கொள்ளைää கொலை சம்பவங்களுக்கு பின்னாலும் பேஸ்புக் மூலம் கிடைத்த தீய உறவின் விளைவுகள் அமைந்திருந்தமையையும் நாம் அறிவோம்.

முகநூல் பயன்பாடு பற்றியும் அது மிகக் கவனமாக கையாளப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிடும்போது 'நவீன தொழில்நுட்பங்களை இளைய தலைமுறையினருக்கு வழங்கும் போது எது தேவை எது தேவையற்றது என்பதனை அறிந்து வழங்குவது மிக அவசியம் எனக் கூறியிருந்தார்.

16-18 வயதுக்கிடையிலான பாடசாலை மாணவ மாணவிகள் பேஸ்புக் இணையத்தளத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தன்டணை விதிக்கக் கூடிய வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தீர்மானித்தள்ளது.

நாமும் நமது இளைய தலைமுறையினர் குறித்து மிகக் கவனமான நிலைப்பாட்டைக் கொண்டிருத்தல் காலத்தின் அவசியமாகும். பெற்றோர்கள்ää ஆசிரியர்கள்ää சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இது தொடர்பாக சமூகத்துக்கு மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக எமது மாணவ சமூகத்தை இப்பாவனையின் தன்மை குறித்து நெறிப்படுத்துவதற்கான வழிமுறைகளை மிகக் கவனமாக கையாள வேண்டும்.

பண்பாடும் ஒழுக்கமும் சீர்பெற்ற ஒரு சமூகம் எந்த நவீன தொழினுட்ப சாதனத்தை பயன்படுத்தினாலும் அதனை நன்மையின்பால் உயயோகிக்கப் பழகிக் கொள்ளும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பாகும்.

எப்போதும் எம்மைப் படைத்தவன் எமது எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் எம்மை வழிப்படுத்தட்டும்.

No comments:

Post Top Ad