முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கும் சக்தியும் பலமும் மு.காவிடம் மட்டுமே உண்டு -மாஹிர் சூளுரை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 20, 2014

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கும் சக்தியும் பலமும் மு.காவிடம் மட்டுமே உண்டு -மாஹிர் சூளுரை


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய சக்தியும்ää ஆணையும் முஸ்லிம் காங்கிரஸ_க்கு மட்டும்தான் உள்ளதென மு.காவின் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்துள்ளார்.


மு.கா வேட்பாளர் இல்ஹாம் மரைக்காரின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் தெஹிவளையில் இடம்பெற்ற உலமாக்களுக்கான ஒன்று கூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாஹிர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறுää கடும்போக்குடைய சிங்கள அமைப்புகளால் இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது அதீத அச்சுறுத்தலும்ää அநீதியும் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. ஆனால் இதனைத் தட்டிக்கேட்காமல் பலரும் ஓடி ஒழியும் சூழலில் தனியா நின்று அந்த அநீதிகளைத் தட்டிக்கேட்பது மு.காவும் அதன் தலைமையுமே ஆகும்.

நவநீதம்பிள்ளையிடம் மு.கா. கையளித்த அறிக்கை. ஓரு தேசத் துரோகமாக இன்று சித்தரிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால்ää உண்மையில் இந்த அறிக்கை சமர்ப்பித்ததானது நாட்டுக்கோ அல்லது இந்த அரசுக்கோ எதிராக வல்ல. அவ்வாறான நோக்கமும் மு.காவுக்கு இல்லை.

மு.கா என்ற கட்சி இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. முஸ்லிம்களின் காவலன் இந்தக் கட்சி மட்டும்தான். அந்த அடிப்படையில்தான் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதே ஒழிய நாட்டுக்கு எதிராகவல்ல.
மு.கா. அரசிலிருந்தாலும் சரி அல்லது எதிர்தரப்பில் இருந்தாலும் சரி இதைத்தான் செய்திருக்கும். செய்யும். எமது இலக்கு முஸ்லிம் சமூகமே ஒழிய பதவிகளல்ல.

அமைச்சுப் பதவி இல்லாமல் ஒரு நாள்கூட கட்சித் தலைமைப் பதவியில் நீடிக்க முடியாதவர்களைப்போல் எமது மு.கா. இல்லை.

அமைச்சுப் பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு சமூகத்துக்காக மு.கா. புறப்பட்ட சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் சான்றுகளாக உள்ளன.

அந்த வேளைகளில் எல்லாம் கட்சி சிதைவடையவில்லை. மாறாக எழுச்சியே கண்டது. மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் மு.கா. பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்று மேல் மாகாணத்தில் மீண்டும் சாதனை படைக்கும் என்றும் மாஹிர் குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad