நவீனமயப்படுத்தப்படவுள்ள காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 04, 2014

நவீனமயப்படுத்தப்படவுள்ள காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்


நூறு மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்படவுள்ள காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியை  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (திங்கட்கிழமை (03))  பார்வையிட்டார்.


கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், அல்ஹிறா வித்தியாலய அபிருத்திச்சங்க செயலாளரும் சமூக சேவகருமான எம்.ஐ.எம் றசீட் உள்ளிட்டோரும் இதன்போது  பங்குபற்றினர். 

காத்தான்குடி ஆற்றங்கரை வீதி மஞ்சந்தொடுவாய்வரை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. விளையாட்டு மைதானம், மேயருக்கான விடுதி வசதி,பெண்களுக்கான கூட்ட மண்டபம், வாராந்தச் சந்தை, பூங்காக்கள்,  சிறுவர்களுக்கான நீச்சல் தடாகங்கள், பொழுதுபோக்குச் சாதனங்கள், மீனவர்களுக்கு மீன்பிடி வசதிகளுடன் தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றை கொண்டதாக இப்பகுதி நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் .No comments:

Post Top Ad