சர்வாதிகார அரசை விரட்டியடிக்க முஸ்லிம்கள் ஓரணியில் திரளவேண்டும் ! முஜிபுர் ரஹ்மான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 09, 2014

சர்வாதிகார அரசை விரட்டியடிக்க முஸ்லிம்கள் ஓரணியில் திரளவேண்டும் ! முஜிபுர் ரஹ்மான்


இந்த ஆட்­சியின் கீழ் முஸ்லிம் சமூ­கம் நசுக்கப்பட்டு- இனவாதம் தூண்டப்பட்டு மிகவும் மோச­மா­ன­தொரு நிலைமை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது என்று மேல் ­மா­காண சபை முன்னாள் உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைப்­பா­ளரும் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­தார்.
ஆகையினால் நாம் ஐக்­கிய தேசிய கட்­சியின் கீழ் ஓர­ணியில் திரண்டு இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்­டிய காலம் கணிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
கொழும்பு மக்­களை அர­சாங்கம் பல வகை­யிலும் சோதித்து வரு­கின்­றது. ஆரம்­பத்தில் எமது மக்­களின் வியா­பா­ரத்தில் கை வைத்­தார்கள். தற்­போது எமது வீடு­களை இடித்து தரை மட்­ட­மாக்­கு­கின்­றனர்.
அப்­பாவி மக்­களை வெளியேற்­றி­விட்டு அந்த இடங்­களை சூதாட்ட விடு­திகள் அமைப்­ப­தற்கும் விப­சார விடு­திகள் நடத்­து­வ­தற்கும் போதை­பொருள் மத்­திய நிலை­ய­மாக்­கு­வ­தற்கும் வெளிநா­டு­க­ளுக்கு விற்க அரசு திட்­ட­மிட்­டு­ கொண்­டி­ருக்­கி­றது.
இவ்­வாறு எமது மக்­களை நசுக்கி அரசு சுகம் அனு­ப­விக்­கின்­றது. மட்­டு­மன்றி கொழும்பு மாவட்­டத்தில் கிராண்ட்பாஸ், தெஹி­வளை, அத்­தி­டிய, மெகட கொலன்­னாவ, ராஜ­கி­ரிய கொஹிலவத்தை உள்­ளிட்ட பல இடங்­களில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­தல்­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.
ஹபாயா தடை, ஹலால் எதிர்ப்பு, மாட­றுப்­புக்கு தடை விதித்தல் என எமது சமூ­கத்தின் மார்க்கக் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­விப்­ப­தற்கு இந்த அர­சாங்கம் துணை போகின்­றது. அதனை தடுத்து நிறுத்த திரா­னி­யற்ற இந்த அர­சாங்­கத்தை இனி­யொ­ரு­போதும் ஆட்­சி­ய­மைக்க இட­ம­ளிக்கக் கூடாது.
இவர்­களின் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டிய தரு­னத்தில் இருக்­கின்றோம். இதற்­கான சந்­தர்ப்பம் தற்­போது கிட்­டி­யுள்­ளது. அரசை வீழ்த்­து­வ­தற்கு இந்த மாகாண சபையை பயன்­ப­டுத்த வேண்டும்.
முஸ்­லிம்­க­ளுக்கு அரசு அநி­யாயம் செய்­வ­தாக கூறிக்­கொண்டு இன்று சிலர் கொழும்பில் வாக்கு கேட்டு வந்­தி­ருக்­கின்­றனர். ஆனால் அவர்கள் மஹிந்த அர­சாங்­கத்­துக்கு முட்­டுக்­கொ­டுத்துக் கொண்­டி­ருப்­பவர்கள்.
இவர்கள் தேர்தல் மேடை­களில் மட்­டுமே முஸ்லிம் சமூகம் என்று பேசித் திரி­கின்­றனர். ஆனால் இன்று வரை பாரா­ளு­மன்­றத்­திலோ அமைச்­ச­ரவை கூட்­டத்­திலோ பள்­ளி­வாசல்கள் தாக்­குதல் பற்றி பிரஸ்­தா­பிக்­க­வில்லை.
இவர்கள் கொழும்பு முஸ்­லிம்­களின் வக்­கு­களை சின்­னா­பின்­ன­மாக்கி பிர­தி­நி­தித்­து­வத்தை குறைத்து விட்டு மக்­களை பாதாள படு­கு­ழி­யில் ­ தள்­ளி­விட முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் சமூகத்தின் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பை நடத்தி சுகபோகங்களை மாத்திரம் அனுபவிக்கின்றனர்.
இவர்களையும் சர்வாதிகார அரசாங்கத்தையும் விரட்டியடிக்க முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி எனும் ஓரணியில் திரள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad