மனிதமேம்பாடு ஜனநாயகமான இலங்கைக்கு மேலைத்தேய சக்திகளால் பாதிப்பு ! தேரர்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 22, 2014

மனிதமேம்பாடு ஜனநாயகமான இலங்கைக்கு மேலைத்தேய சக்திகளால் பாதிப்பு ! தேரர்கள்


மேற்கத்தைய நாடுகள் சிலவும், உள்நாட்டில் பதவி அவா மிகையாக கொண்டவர்கள் மீண்டும் ஒருமுறை நாட்டை பாதிப்புக்குள் தள்ளிவிட முயற்சித்து வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இது மிகவும் சங்கடத்துக்குரிய விடயம் என்ற மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மல்வத்தை மற்றும் அஸ்கரி மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றை கையளித்த போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போன்ற ஆன்மீக மற்றும் மனிதமேம்பாடு உடைய ஜனநாயக நாட்டுக்கு மேலைத்தேய சக்திகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்;.
நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் தருணத்தில் ஜெனீவான மனிதவுரிமைகள் மாநாட்டின் ஊடாக இலங்கைக்கு எதிராக சிலர் சூழ்ச்சிகளை மேற்கொள்ள முனைவதாக மகாநாயக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டின் போது ஏற்படும் உண்மையான விளைவுகளை தெளிவு படுத்தும் கூட்டமொன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி நடத்துவதற்கான கோரிக்கையை ஜனாதிபதி, மகாநாயக்கர்களிடம் விடுத்துள்ளார்.

No comments:

Post Top Ad