முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜெனீவா பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டமையை நாட்டை காட்டிக் கொடுத்தாக கருத முடியாது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜெனீவா பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டமையை நாட்டை காட்டிக் கொடுத்தாக கருத முடியாது


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

‘இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜெனீவா பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டமையை ஓரு போதும் நாட்டை காட்டிக் கொடுத்தாக கருத முடியாது’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்ää

“இந்த நாட்டு முஸ்லிம்கள் உள்நாட்டில் தொடர்ச்சியாக எதிர் நோர்க்கும் பல்வேறுபட்ட இன அடக்கு முறைகளை இனம் சார்ந்த கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்கள் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்தமை ஓரு போதும் இந்த நாட்டை காட்டிக் கொடுத்தாக அமையாது. அவ்வாறு எவரும் கருதக் கூடாது.

இந்த நாட்டு முஸ்லிம்களின் ஏக பிரதி நிதிகளாக விளங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் முஸ்லிம்கள் எதிர் நோர்க்கும் பிரச்சினைகளை உரிய நேரத்தில் குறித்த தரப்பினருக்கு தெரியப்படுத்துவது தலையாத கடமையுமாகும். இதனை எவரும் பிழையான கண்ணோட்டத்தில் விளங்கிக் கொண்டு அரசியல் இலாபம் தேட முற்படக் கூடாது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட இன அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். அப்பிரச்சினைகளை ஆரம்பத்தில் உரியவர்கள் உரிய வகையில் தடுத்து நிறுத்தத் தவறியதன் காரணமாகவே முஸ்லிம்கள் மீதான இன அடக்கு முறைகள் மேலும் மேலும் கட்டவிழ்து விடப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது.

தடுத்து நிறுத்தத் தவறியதன் விளைவாகவே அதிகளவான பள்ளிவாயல்கள் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது. அது மாத்திரமின்றி முஸ்லிம்கள் கலாச்சார ஆடைகளை அணிவதிலும் புனித மார்க்க கடமையை நிறைவேற்ற ஹஜ் கடமைக்கு சென்று வருவதற்கும் மார்க்க விடயங்களுக்காகவும்ää உணவுக்காகவும் பிராணிகளை அறுப்பதற்கும் தடை விதிக்கக் கோரி இன்று வரைக்கும் பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்களும்ää போராட்டங்களும்ää உண்னாவிரதங்களும் புகையிரத நிலையத்திற்கு முன்னாலும்ää பஸ் நிலையங்களுக்கு முன்னாலும் தொடர்ந்த வண்ணம் இருந்திருக்காது.

அன்று விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலான காலத்தில் பள்ளிவாயல்களுக்கு இருந்த பாதுகாப்புக்கள் கூட இன்று இல்லை என்பதை பொறுப்புள்ளவர்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

தேர்தல் மேடைகளில் நாங்கள் பள்ளிவாயல்களை உடைக்கவில்லை முடிந்தால் நிரூபித்துக்காட்டுங்கள் என்று கூறுவது வேடிக்கையாகவுள்ளது உரத்து உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றுவதன் மூலம் ஒருபோதும் உண்மைகளை மறைக்க முடியாது.

இன்று வரைக்கும் எத்தனையோ பள்ளிவாயல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்பதை சம்மந்தப்பட்டவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நிரூபித்துதான் காட்ட வேண்டும் என்பது நகைப்புக்குறியது.

எந்தவொரு ஆட்சியாளரும் எதையும் உண்மையென ஏற்றுக் கொண்ட வரலாறு கிடையாது. இன்று இதை மட்டும் ஏற்றுக் கொள்வதற்கு பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்று கூடி ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பல சந்தர்ப்பங்களும்ää ஊடகச் செய்திகளையும் மறந்து நிரூபித்து காட்டுமாறு சவால் விடுவது இன்னும் நகைச்சுவையாகவுள்ளது.

பள்ளிவாயல்கள் உடைக்காப்படுகின்ற போது தடுத்து நிறத்துவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டு இன்று தேர்தல் மேடைகளில் பௌத்த மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட உரையாற்றி மேலும் முஸ்லிம்கள் மீது வெறுப்பையேற்படுத்த பொறுப்புள்ளவர்கள் முற்படக் கூடாது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் தனியே பௌத்த இனவாதத்தால் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. அதற்கு முன்பதாக கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவித்து பல ஆயிரக் கணக்கான பெறுமதிமிக்க உயிர்களை தொழுகையின் போது பள்ளிவாயல்களிலும்ää பிரயாணத்திலும்ää வயிற்றுப்பிழைப்புக்காக விறகு வெட்டää மீன் பிடிக்க மற்றும் வியாபாரதிற்காக செல்லும் போதும் பழி கொடுத்ததுடன்ää 33க்கும் அதிகமான முஸ்லிம் கிராமங்களிலிருந்து பலவந்தமாக இரவோடு இரவாக உடுத்த உடையுடன் பல கோடிக்கணக்கான பொருளாதாரங்களை பறித்தெடுத்த நிலையில் வெளியேற்றப்பட்டனர்.

அன்று வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் இன்று வரைக்கும் மீள்குடியேற முடியாது அகதிளாக அங்கும் இங்கும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இன படுகொலைகளையும் அநீதிகளையும் ஏன் முஸ்லிம்கள் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தக் கூடாது? அவ்வாறு தெரியப்படுத்துவது எந்த வகையில் நாட்டை காட்டிக் கொடுத்தாக அமையும்?

தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ விடுதலைப் போராட்டங்களை தோற்றுவித்த போராட்டக் குழுக்களின் போராட்ட இலக்குகள் திசைமாறியதன் காரணமாக நிராயுதபானிகளான பல லட்சக்கணக்கான அப்பாவி பௌத்தää முஸ்லிம் மக்கள் அதற்கு பழியானார்கள்.

அவைகளை முழுமையாக மறைத்து தங்களுக்கு எதிராக மாத்திரம் இடம்பெற்றதாக கூறப்படும் அநீதிகளை பட்டியல் இட்டுக் கொண்டு நியாம் தேடி சர்வதேசத்திற்கு முன்னால் வரிந்து கட்டிக் கொண்டு அன்று ஆயுதக்குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று தமிழர்களின் அரசியல் தலைமைகளாக மாறி நின்று கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு முன்னால் முஸ்லிம் தலைமை தெரியப்படுத்தியதை மனச்சாட்சியுடன் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

முஸ்லிம் தலைமையானது தனது சமூகத்திற்கு பொறுப்புக் கூறும் கட்டாயத்திலுள்ளது என்பதையும் அதன் நியாப்பாடுகளையும் பொறுப்புக் கூறும் தன்மையையும் நாட்டின் தலைமைகள் பொதுவான கண்னோட்டத்தில் பார்க்க வேண்டும்.

இன்று வரைக்கும் அனைத்து முஸ்லிம் அரசியற் தலைமைகளும் அதி உத்தம ஜனாதிபதி அவர்களின் கரங்களையே பலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

அவ்வாறு இருக்கின்ற போது ஒரு முஸ்லிம் கட்சி நாட்டை காட்டிக் கொடுத்து விட்டது என்று குற்றம் சுமத்துவது மேலும் இன முறண்பாட்டுக்கே வழிவகும்” எனவும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad