பொலிஸ் வேட்டையில் “பாலன்;கட ஹீன்மல்லி” சுட்டுக் கொலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 11, 2014

பொலிஸ் வேட்டையில் “பாலன்;கட ஹீன்மல்லி” சுட்டுக் கொலை

(tm)

இரத்தினபுரி மாணிக்கக்கல் வர்த்தகரின் கொலைச் சம்பவம் உட்பட பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பாலன்;கட ஹீன்மல்லி என்பவர் செவ்வாய்க்கிழமை (11) பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மாணிக்கக்கல் வர்த்தகரான சுமித் குணசேகரவின் கொலை  மற்றும் அவரது வீட்டிலிருந்து பணம், மாணிக்கக்கல், தங்கநகைகள் கொள்ளை போனமை தொடர்பில்; பெப்ரவரி 13ஆம் திகதி சுகத் சமிந்த என்ற பாலன்கட ஹீன்மல்லி என்பவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். 

தனது ஆயுதங்களை காட்டுவதாக பொலிஸாரை கூட்டிச் சென்ற இவர்,  அங்கு பொலிஸார் மீது கைக்குண்டொன்றை வீச முற்பட்டபோது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர். 

No comments:

Post Top Ad