ரவூப் ஹக்கீம் ஆவ­ணத்தை வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டாது உள்­ளக பிரச்­சி­னையை அர­சாங்­கத்­து­டன் பேசித் தீர்த்திருக்கவேண்டும் ! ஹிஸ்புல்லாஹ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 27, 2014

ரவூப் ஹக்கீம் ஆவ­ணத்தை வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டாது உள்­ளக பிரச்­சி­னையை அர­சாங்­கத்­து­டன் பேசித் தீர்த்திருக்கவேண்டும் ! ஹிஸ்புல்லாஹ்

(vi)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளை­யிடம் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆவ­ணத்தை வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டாது. உள்­ளக பிரச்­சி­னையை அர­சாங்­கத்­து­ட­னேயே பேசித் தீர்த்­தி­ருக்­க­வேண்டும் என்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.
எவ்­வா­றெ­னினும் தேர்­தலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் ஜனா­தி­பதி பேச்சு நடத்­த­வுள்­ள­துடன் இந்த விவ­காரம் தீர்க்­கப்­பட்­டு­விடும் என்று நம்­பு­வ­தா­கவும் பிர­தி­ய­மைச்சர் குறிப்­பிட்டார்.
 
சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். பிர­தி­ய­மைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது : சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­பது ஆளும் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்­சி­யாகும். இவ்­வாறு ஆளும் கூட்­ட­ணியில் பல கட்­சிகள் உள்­ளன. அந்­த­வ­கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சி ஒன்றின் தலை­வ­ராக உள்­ள­துடன் அந்தக் கட்சி எமது கூட்­ட­ணியில் உள்­ளது. இந்­நி­லையில் தேர்­தலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் ஜனா­தி­பதி பேச்சு நடத்­த­வுள்­ள­துடன் இந்த விவ­காரம் தீர்க்­கப்­பட்­டு­விடும் என்று நம்­பு­கின்றோம்.
 
இதே­வேளை மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்­ளை­யிடம் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆவ­ணத்தை வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டாது என்­பதே எனது நிலைப்­பா­டாகும். உள்­ளக ரீதியில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னையை அர­சாங்­கத்­து­ட­னேயே பேசித் தீர்த்­தி­ருக்­க­வேண்டும். அதற்­கான சந்­தர்ப்பம் உள்­ளது. எந்தப் பிரச்­சினை என்­றாலும் அர­சாங்­கத்­துடன் பேச்சு நடத்­தி­யி­ருக்­கலாம்.

No comments:

Post Top Ad