அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி இதுவரை எதனையுமே எனக்குச் செய்யவில்லை ; சிராஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி இதுவரை எதனையுமே எனக்குச் செய்யவில்லை ; சிராஸ்

(vi)

அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி இதுவரை எதனையுமே எனக்குச் செய்யவில்லை. அது மட்டுமல்ல, இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால். நான் இன்றுவரை உத்தியோகப்பற்றற்ற பிரதி மேயராகவே உள்ளேன். எனது பெயர் பிரதி மேயர் பதவிக்கு இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை. கல்முனை ஆணையாளரே இதனை என்னிடம் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் வெற்று வாக்குறுதிகளை வழங்கி என்னை ஏமாற்றியது மட்டும்தான் மிச்சம் எனவே முஸ்லிம் காங்கிரஸிருந்து வெளியேறுவதா இல்லையா? என்ற முடிவை விரைவில்  அறவிப்பேன்; என  கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய பிரதி மேயருமான சிராஸ் மீராசாகிப் வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் கடுமையாக மக்களுக்காக உழைத்து வருவது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று எனது கட்சிக்குள் உள்ள பலரும் கருதினர். நேரடியாகவும் ஒருவர் இந்த விடயத்தை என்னிடம் கூறினார். 
இதன் காரணமாகவே என்னை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து துரத்துவதற்குப் பலரும் எனக்கெதிராகச் சதி செய்தனர் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். முக்கியமாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்குச் சதி செய்து வருகின்றனர். 
இந்த வகையில் மேயர் பதவியிலிருந்து நான் இராஜினாமாச் செய்ய வேண்டுமென அமைச்சர் ஹக்கீம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம்.
நான் பதவி விலகுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து எனது பதவிக் காலம் முடிவுற உள்ளமை தொடர்பில் அவருக்கு எடுத்துக் கூறி நான் தொடர்ந்து பதவி வகிக்க முடியுமா என்று கேட்டேன். 
அதற்கு அவர் மக்களிடம் பிரபல்யம் அடையும் வகையில் நீங்கள் வேலை செய்யுங்கள் பின்னர் மற்றவை குறித்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தார். அது எனக்கு நம்பிக்கை தருவதாகவே இருந்தது. ஆனால், அவர் என்னை குறித்த காலத்தில் பதவி விலகியே ஆக வேண்டுமென்று அன்றே கூறியிருந்தால் அதற்கேற்றபடி நான் செயற்பட்டிருப்பேன். நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளையும் துரிதப்படுத்தியிருப்பேன்.

No comments:

Post Top Ad