இலங்கையில் றிபாய் தரீக்கா முஸ்லிம் சன்மார்க்க ரீதியில் பல சேவைகளை செய்கிறதாம் ! அஸ்வர் எம்.பி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 25, 2014

இலங்கையில் றிபாய் தரீக்கா முஸ்லிம் சன்மார்க்க ரீதியில் பல சேவைகளை செய்கிறதாம் ! அஸ்வர் எம்.பி


(tk)
இலங்கையில் றிபாய் தரீக்கா முஸ்லிம் சன்மார்க்க ரீதியில் பல சேவைகளை செய்துவருகின்றது. இதனால் ஆன்மிக வளர்ச்சி வலுப்பெற்று வருகின்றது. இவ்வாறு வெலிகம கப்புவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் தரீக்காவின் சேவைகளை ஆன்மிகத் துறையின் பங்களிப்புகளை பற்றி புகழ்ந்து பேசினார்.

இதனை நாம் கண்கூடாகக் கண்டோமென்று ஊடக மேற்பார்வை எம்.பி.யும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
இலங்கை றிபாய்த் தரீக்காவின் 137வது வருட கந்தூரி வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில் :-
இன்று நாட்டில் ஆன்மீகம் மழுங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் றிபாய் தரீக்கா தனது சன்மார்க்க சேவைகளை தடைப்படாது செய்து கொண்டு வருகிறது. இதற்காக வேண்டி அதன் தலைவர் அஸ்ஸெய்யித் யூ. பீ. ஆஷிக் தங்கள் அயராது உழைத்து வருகின்றார்கள். அவரது இந்த அரும் உழைப்பால் ஆன்மிகத் துறை வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதற்கு நாம் அனைவரும் அன்னாருக்கு பக்கபலமாக இருந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு முஸ்லிமும் வீடுகளில் ஸலவாத்து ஓதுதல், திக்ரு, குர்ஆன் ஓதுதல் போன்ற இன்னோரன்ன அனைத்து ஜமாத் சார்பான வைபவங்களை நடத்தி இதற்குப் புத்துயிர் அளிக்கவேண்டும். இது போக இன்றைய காலகட்டத்தில் ஊடுருவியுள்ள இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது இவ்விடயத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வைபவத்தில் கலீபதுல் குலபா மெளலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) மெளலவி எம். என். எம். இஜ்லான் மற்றும் பலரும் உரையாற்ற றிபாய் தரீக்காவில் தன்னை நீண்டகாலம் ஈடுபடுத்திக்கொண்டு சேவையாற்றி வரும் பாராளுமன்ற உறுப்பினரும், பேரவை அங்கத்தவரும், ஊடக கண்காணிப்பு எம்.பியுமான ஏ. எச். எம். அஸ்வருக்கும் வக்பு சபையின் தலைவருமான அஹ்கம் உவைஸ் அவர்களுக்கும் றிபாய் தரீக்கா சார்பாக அதன் தலைவர் யூ. பீ. ஆஷிக் தங்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவித்தனர்.
இறுதியாக றிபாய் தரீக்காவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஹனீபா இஸ்ஹாக் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post Top Ad