எனக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கருத்து மோதல்கள் இல்லை ! ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

எனக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கருத்து மோதல்கள் இல்லை ! ஹக்கீம்

(sfm)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு வழங்கிய அறிக்கை தொடர்பில் தற்போது இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வெளியிட்டிருந்த அறிக்கையில், முஸ்லிம் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும் விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பான தகவல்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸே மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கி இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, ஜனாதிபதி இது தொடர்பில் வினவி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் தமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து மோதல்கள் எவையும் இல்லை என்றும் அமைச்சர் கூறி இருந்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருப்பதன் மூலம், இலங்கையின் நடப்பு சூழ்நிலையை திருத்தி கூறி இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும், அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான விவாதம் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad