இந்த முஸ்லிம் இளைஞரை காணவில்லை ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, March 26, 2014

இந்த முஸ்லிம் இளைஞரை காணவில்லை !


மட்டக்களப்பு புணாணை ஐயந்தியாய என்னும் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரைக் காணவில்லையென வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருவளை அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியை கற்றுவந்த முஹம்மது உவைத் முஹம்மது அம்மார் (வயது 16) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு தனது விடுமுறை முடிந்தவுடன் வீட்டிலிருந்து, கல்வி கற்கும் பேருவளை அல்-ஸலாஹ் அரபுக் கல்லூரிக்கு சென்றவர் இன்னும் அங்கு போய் சேரவில்லை என்று மதரசா நிருறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பெற்றோரும், உறவினர்களும் தேடியும் தகவலும் கிடைக்காத நிலையில் நேற்று வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post Top Ad