முஸ்லிம் காங்கிரஸ் மீது சீறிப் பாயும் ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

முஸ்லிம் காங்கிரஸ் மீது சீறிப் பாயும் ஜனாதிபதி

(tm)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பெரும் பிளவுக்கு இட்டுச் செல்லக்கூடும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீதியமைச்சர் ஹக்கீமிடம் அரசாங்கத்தில் அவரது கட்சி இருக்கின்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸினால் கொடுக்கப்பட்ட ஓர் ஆவணம் பற்றி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பல அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதாக டெய்லிமிரருக்கு கிடைத்த நம்பகமான செய்திகள் கூறின.

நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றிய விபரமும் அரசாங்கம் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விடயமும் இந்த 50 பக்க அறிக்கையில் இருந்ததாக மந்திரி சபை கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது. 

தாக்குதல்கள் நடந்த இடங்களும் கடந்த வருடம் முஸ்லிம்கள் துரத்தப்பட்ட பகுதிகளும் குறிக்கப்பட்ட படமும் இந்த அறிக்கையில் சேர்கப்பட்டிருந்தது.

நவநீதம்பிள்ளை இந்த ஆவணத்தை தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு கசியவிட்டார் எனவும் அவர்கள் இந்த அறிக்கையுடன் இலங்கையுடன் நட்பாகவுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் பொழுது அந்த முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் படி பரப்புரை செய்து வருகின்றனர் என ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் கூறியுள்ளனர். 

இதனையடுத்தே, கோபமடைந்துள்ள ஜனாதிபதி, அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் இருக்கின்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

No comments:

Post Top Ad