அமெரிக்காவுடன் எதிர்ப்பு என்றால் பசிலும்,கோத்தாவும் அமெரிக்காவின் கடவுச் சீட்டுக்களை கிழித்தெறியட்டும் ! மங்களவின் சவால் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 29, 2014

அமெரிக்காவுடன் எதிர்ப்பு என்றால் பசிலும்,கோத்தாவும் அமெரிக்காவின் கடவுச் சீட்டுக்களை கிழித்தெறியட்டும் ! மங்களவின் சவால்


உண்மையாகவே அமெரிக்காவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக இருந்தால், பசில் ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்சவும் தங்களின் அமெரிக்க கடவுச் சீட்டுகளை அமெரிக்க தூதுவரகத்துக்கு முன்னால் வைத்து கிழித்தெறியுமாறு ஐக்கிய தேசிய கட்சி சவால் விடுத்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறது.
ஆனால் ஊழல் மிகுந்த அரசாங்கம் தமது உண்மையான தோற்றத்தை மறைத்துக் கொள்வதற்காக ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டை பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பிரேரணை மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் ஊடகவியலாளர்களையும்,  குடிநீர் கேட்டு போராடியவர்களையும் தாக்கி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post Top Ad