வடக்கில் தோன்றியிருக்கும் இராணுவக் கெடுபிடிகள் மக்களின் இயல்பான வாழ்கையினைப் பாதிக்கிறது ! அய்யுப் அஸ்மின் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, March 26, 2014

வடக்கில் தோன்றியிருக்கும் இராணுவக் கெடுபிடிகள் மக்களின் இயல்பான வாழ்கையினைப் பாதிக்கிறது ! அய்யுப் அஸ்மின்

(pmgg)
வடக்கில் தற்போது தோன்றியிருக்கும் மக்கள் நலன்களைப் பாதிக்கும் அசாதாரண நிலைகள் உடனடியாக கைவிடப்படவேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வடக்கில் தோன்றியிருக்கும் இராணுவக் கெடுபிடிகள் மக்களின் இயல்பான வாழ்கையினைப் பாதிக்கின்ற விடயமாகமே இருக்கின்றது. அவ்வாறான ஒரு அசாதாரண நிலையின் ஏன் ஏற்பட்டது என்பதற்கு நியாயபூர்வமான பதில்கள் இதுவரை பாதுகாப்புத்தரப்பினர் வழங்கவில்லை, மாறாக புலிகளின் தலைவர்களுள் ஒருவர் எனச் சந்தேகிக்கும் ஒருவரைத் தேடுகின்றோம் எனக் கூறப்பட்டிருக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளின் பின்னால் உள்ள காரணிகள் குறித்து நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்னரும் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதில் ஆர்வம் காட்டுகின்றதா என்ற கேள்வியை எம்முள் ஏற்படுத்துகின்றது. மனித அவலங்களை ஏற்படுத்திய யுத்தம், நிறைவடைந்து மக்கள் இயல்பான வாழ்வை அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்ற இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இரண்டு முக்கிய விடயங்களை எதிர்கொண்டிருக்கின்றது. முதன்மையாக சர்வதேசிய அரங்கில் தோன்றியிருக்கும் யுத்தக் குற்றவிசாரணை கோரும் ஜெனீவாவின் பிரேரணை, அடுத்து மேல், தென் மாகாணசபைகளுக்கான தேர்தல். இரண்டு நிலைகளிலும் அரசு பல்வேறு இக்கட்டான நிலைகளை எதிர்கொள்கின்றது எனபதையே வடக்கில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் கெடுபிடிகளும், புலிப்பூச்சாண்டிகளும் நோக்கப்படுகின்றது.
குறிப்பாக மேல், தென் மாகாணங்களில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவை நிவர்த்திக்க சிங்கள வாக்காளர்கள் மத்தியில் “புலிகள் மீண்டும் உருவெடுத்திருக்கின்றார்கள்” என்ற பிரச்சாரம் உதவும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதேபோன்று ஜெனீவாவை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மனிதாபிமானப் போராட்டங்களை முடக்குவது இரண்டாவது தேவையாக இருக்கின்றது. எனவே இவ்விரண்டு நோக்கங்களையும் அடைந்துகொள்வதற்கான அப்பாவி மக்களை கைது செய்வது, திடீர் சுற்றிவளைப்புகள், கைதுகளை மேற்கொள்வது என அரசாங்கம் பல்வேறு உக்திகளைக் கையாள்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் பாதிப்படைகின்றார்கள். அமைதியானதும் நல்லிணக்கமானதுமான சூழ்நிலையே மனிதத்தை நேசிக்கின்ற, மனித உரிமைகளை மதிக்கின்ற, இந்த நாட்டில் அமைதியையும் நிலையான அபிவிருத்தியினையும் எதிர்பார்க்கின்ற, இந்த நாட்டை நேசிக்கின்ற ஒவ்வொரு குடிமகனினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

No comments:

Post Top Ad