தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது ! அமெரிக்கா (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 27, 2014

தீர்மானத்தின் ஊடாக இலங்கையில் சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது ! அமெரிக்கா (வீடியோ இணைப்பு)


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக இலங்கைக்கு மிகத் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
நித்தியமான சமாதானம், சௌபாக்கியத்தை ஏற்படு;த்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என்ற செய்தி இலங்கைக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

நீதியை நிலைநாட்டுதல், குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள இலங்கைக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.
மனித உரிமை பேணல், ஜனநாயக ஆட்சி போன்றவற்றுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்பது இந்த தீர்மானம் மூலம் வெளிப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அழுத்தங்கள் குறித்து அமெரிக்கா கண்காணித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad